உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இரையைத்தேடி  வயல்வெளியில் குவியும் சரணாலயப் பறவைகள் 

இரையைத்தேடி  வயல்வெளியில் குவியும் சரணாலயப் பறவைகள் 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளதால் வயல் வெளியில் புழு, பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் வருவது அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரகோட்டைஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன. குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் இனப்பெருக்கம் செய்வதற்காக அக்.,ல் வந்து மார்ச் வரை தங்கி அதன் பின் இடம் பெயர்கின்றன. இவ்வாண்டு ராமநாதபுரம், பரமக்குடியில் மழை பெய்துள்ளதால் சரணாலயங்களுக்கு பறவைகள் வந்துள்ளன. தற்போது நெல் சாகுபடி பணி காரணமாக வயல் வெளிகள், ஓடைகளில் புழு, பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் குவிகின்றன. இவற்றை அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அலைபேசியில் படம் எடுத்து மகிழ் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SUBBU,MADURAI
நவ 09, 2025 15:32

பரமக்குடி வனத்துறையினருக்கு ஒரு வேண்டுகோள் இரண்டு நாட்களுக்கு முன் நான் குடும்பத்துடன் காரில் இராமேஸ்வரத்திற்கு சென்று விட்டு திரும்பும் வழியில் NH ரோட்டில் பரமக்குடியில் கண்மாயில் எண்ணிலடங்கா அயல்நாட்டுப் பறவைகள் வந்து கூடு கட்டி தங்கள் குஞ்சுகளுக்கு இரையை ஊட்டிக் கொண்டிருக்கும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தோம் அப்போது அங்கு பைக்கில் வந்த மூவர் அவர்கள் அக் கண்மாயில் ஏற்கனவே கட்டி வைத்திருந்த நைலான் வலையில் சிக்கிய மூன்று பறவைகளை ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்றதை கவனித்த நான் அவர்களிடம் சண்டையிட்டு அந்த பறவைகளை விடுவித்தேன். அதற்குள் என் மனைவி அவர்களின் பைக் எண்ணை படம் பிடிப்பதை பார்த்த அவர்கள் எங்களிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டு அங்கிருந்து ஓடி விட்டார்கள் எனவே பரமக்குடியில் உள்ள ஹைவே ரோந்து போலீஸாரும் வனத்துறையும் இணைந்து அந்தப் பறவைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை