உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / துாய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு மாதம் சம்பளம் பாக்கி

துாய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு மாதம் சம்பளம் பாக்கி

கீழக்கரை : கீழக்கரை நகராட்சியில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.கீழக்கரை நகராட்சியில் 1 முதல் 21 வார்டுகள் உள்ளன. 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் நகராட்சியில் 64 தற்காலிக துாய்மைப் பணியாளர்கள் பணி புரிகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஒப்பந்த துாய்மைப் பணியாளர்கள் கூறியதாவது:துாய்மைப் பணியாளர்கள் மற்றும் கழிவுநீர் அகற்றுபவர்கள், பம்பிங் உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக கீழக்கரை நகராட்சியில் இருந்து சம்பளம் வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது. அத்தியாவசிய குடும்பச் செலவுகளுக்கு சிரமப்படுகிறோம். கடன் வாங்கி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே முறையாக சம்பளம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி