உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலோர கோயில் நிலங்களில்  மரக்கன்று நடவு செய்யும் விழா 

கடலோர கோயில் நிலங்களில்  மரக்கன்று நடவு செய்யும் விழா 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையோர கோயில் நிலங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்க விழா நடந்தது.ஸ்பீடு அறக்கட்டளை சார்பில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தில் ஆதரவு மற்றும் புது டெல்லியில் உள்ள 'தி எனர்ஜி ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட்' நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி கடலோர கோயில் நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட பெரிய அம்மன் கோயில் பொது இடத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சோமசுந்தரம் தலைமை வகித்து மரக்கன்றுகள் நடவு செய்வதை துவக்கி வைத்தார்.பனைக்குளம் ஊராட்சி தலைவி பவுசியா பானு முன்னிலை வகித்தார். கிருஷ்ணாபுரம் கிராம தலைவர் தங்கராஜ் வரவேற்றார். ஸ்பீடு அறக்கட்டளை இயக்குநர் தேவராஜ் திட்டம் குறித்து பேசினார். ஸ்பீடு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அமராவதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி