அன்புக்கரங்கள் திட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம் துவக்க விழா நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங்காலோன் முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன் அன்புக்கரங்கள் திட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள் பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கினார். மாவட்டத்தில் இத்திட்டத்தில் 221 குழந்தைகள் பயன்பெற உள்ளார்கள். முன்னதாக சென்னையில் நடந்த துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தில் ஒரு பகுதியாக பெற்றோரை இழந்த 18 வயது வரையிலான பள்ளி படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கிடும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் , மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாவதி, மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி, நன்னடத்தை அலுவலர் ஜோதியராஜன் பங்கேற்றனர்.