உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ம் ஆண்டு விழா நடந்தது.தாளாளர் கோகிலா தலைமை வகித்தார். விருந்தினரான தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார். முதல்வர் பிரீத்தா ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாக ஆலோசகர் ஜேக்கப் வரவேற்றார்.பி.எஸ்.என்.எல்., இளநிலை பொறியாளர் சரவணன், ராமநாதபுரம் அரசு மாதிரிப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் தமிழரசி, தொழிலதிபர் ஜி.பி.நாகேந்திரன் உட்பட பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கி பாராட்டப்பட்டது.மாணவர்களின் நடனம், நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முதுகலை ஆசிரியர் முத்துக்கண்ணு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி