உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளிகள் திறப்பு: இனிப்பு வழங்கி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்

பள்ளிகள் திறப்பு: இனிப்பு வழங்கி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்

ராமநாதபுரம்: கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. மாலை அணிவித்து சந்தனமிட்டும், இனிப்பு வழங்கி மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் 1310 உள்ளன. கோடை விடுமுறை முடிந்து நேற்று (ஜூன் 2 ல்) ஒன்று முதல் பிளஸ் 2 வரையில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அரசு, தனியார் பள்ளி வளாகம், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டது. புதிய மாணவர்களை சந்தன பொட்டிட்டு, சாக்லெட் கொடுத்து வரவேற்றனர். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ராமநாதபுரம் நகராட்சி வள்ளல்பாரி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார்.மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள் அரிசியில் அ எழுதி பழகினர்.முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பங்கேற்றார். புல்லங்குடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்க்கை வந்த மாணவர்களை சிலம்பாட்டத்துடன் வரவேற்று மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். ஏ.பி.ஜே., அப்துல்கலாம் இளைஞர் மன்றம் சார்பில் எழுது பொருட்கள் வழங்கினர்.தலைமையாசிரியர் எஸ்தர் வேணி, ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி விடுதியில் தங்கும் மாணவர்கள் புதிய பெட்டி, படுக்கை, வாளிகளுடன் வந்திருந்தனர். கடந்தாண்டை போல இவ்வாண்டும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை