உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சீசன் எதிரொலி ராமநாதபுரத்திற்கு மாம்பழங்கள் வரத்து:  கிலோ ரூ.100

சீசன் எதிரொலி ராமநாதபுரத்திற்கு மாம்பழங்கள் வரத்து:  கிலோ ரூ.100

ராமநாதபுரம்: மா சீசனை முன்னிட்டு ராமநாதபுரத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம், மதுரை மாவட்ட பகுதிகளிலிருந்து மாங்காய்கள், மாம்பழங்கள் வந்துள்ள நிலையில் கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே மா சாகுபடி நடக்கிறது. இதனால் ஒவ்வொரு சீசனிலும் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தமாக வாங்கி வந்து விற்கின்றனர். தற்போது மா சீசன் துவங்கியுள்ளதால் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலிருந்து மாம்பழங்கள் ராமநாதபுரம் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. அதிகபட்சமாக கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரையும், கல்லாமணி, காசாலட்டு மாம்பழங்கள் கிலோ ரூ.100 என தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். மா சீசன் தற்போதுதான் துவங்கியுள்ளதால் விலை அதிகமாக உள்ளது. இனிவரும் வாரங்களில் வரத்து அதிகரிக்கும் என்பதால் மாம்பழத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை