கடல்பாசியில் ஊறுகாய் தயாரிக்கும் போட்டி
ராமநாதபுரம் : அமிர்தா விஸ்வ வித்யா பீடம் சார்பில் 'புளு இஸ் த நியூ பிங்க்' என்ற திட்டத்தின் கீழ் கடலோர பெண்களுக்கு தொழில் முனைவோர் திறனையும் நிலைத் தன்மையான கடல் சார்ந்த வாழ்வாதார வாய்ப்புகளையும் ஊக்குவிக்க கடல் பாசியில் ஊறுகாய் தயாரிக்கும் போட்டியினை நடத்தியது.கடல் பாசி வளர்ப்பு குறித்து 64 பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. கடல் பாசியில் ஊறுகாய் தயாரிக்கும் போட்டியில் 3 கிராமங்களை சேர்ந்த பெண்கள் கப்பாபைக்கஸ் கிராசிலாரியா போன்ற உள்ளூர் கடல்பாசி வகைகளை பயன்படுத்தி புதுமையான செய்முறைகளை வழங்கினர். சுவை, புதுமை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது.மீன் வளத்துறையின் விஷால், சசிகுமார் ஆகியோர் ஊக்கமளிக்கும் வகையில் பேசினர். போட்டியில் வெற்றி பெற்ற தனலட்சுமி, லமியா, அபிலா டெரஸ் குழுவினரை பாராட்டினர்.