உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.பி., ஆய்வு

பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.பி., ஆய்வு

முதுகுளத்துார்: கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 117-வது ஜெயந்தி, 62ம் ஆண்டு குருபூஜை விழா அக்.28, 29, 30ல் நடக்கிறது. இதையடுத்து முதுகுளத்துார் ஒன்றியத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் எஸ்.பி.,சந்தீஷ் ஆய்வு செய்தார்.அப்போது முதுகுளத்துார் அருகே கீழத்துாவல், விளங்குளத்துார், முதுகுளத்துார், கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது முதுகுளத்துார் -கமுதி ரோடு பஸ் டிப்போ, சித்திரங்குடியில் சோதனைச் சாவடி அமைத்து போலீஸ் வாகன சோதனையில ஈடுபடுவார்கள். குருபூஜைக்கு டூவீலரில் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.மீறி செல்பவர்களை தனிப்படை போலீசார் கண்காணிக்க உள்ளனர். டூவீலர், காரில் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. கிராமங்களில் இருந்து மக்கள் சென்று வர போதுமான பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் பஸ்சில் செல்ல வேண்டும். டூவீலரில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார். உடன் முதுகுளத்துார் டி.எஸ்.பி., சின்னக்கண்ணு உட்பட போலீசார் பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ