மேலும் செய்திகள்
இறந்த மாணவி குடும்பத்திற்கு நிதி
14-Dec-2024
மத்திய அமைச்சர் பார்வையிட்டார்பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வேளாண் நிலையத்தில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு வரும் விதை சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை மத்திய இணை அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா பார்வையிட்டார்.பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக உள் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இங்கு மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 'முன்னேற விளையும் மாவட்ட திட்டம்' என்ற அடிப்படையில் விதை சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டடம் மற்றும் ரூ.25 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் என ரூ.1 கோடியில் பணிகள் நடக்கிறது. தொடர்ந்து விவசாயிகளுக்கு தரமான விதைகளை அளிக்க இந்த மையம் செயல்பட உள்ளது.இந்த கட்டடத்தை மத்திய சிறு தொழில், இரும்பு மற்றும் நிலக்கரித் துறை இணை அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா பார்வையிட்டார். பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் உட்பட வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
14-Dec-2024