மகளிர் குழுக்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி
கமுதி, : -கமுதி அருகே காத்தனேந்தல் ஊராட்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், பகவதி அறக்கட்டளை சார்பில் மகளிர் குழுக்களுக்கு சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். நிதிசார் ஆலோசகர் சாமிதாசன், ஊராட்சி தலைவர் செந்தில், துணை தலைவர் பாலு, அறக்கட்டளை தலைவர் வெள்ளைபாண்டியன் முன்னிலை வகித்தனர். பயிற்றுனர் மகாகிருஷ்ணன் வரவேற்றார். அப்பளம், ஊறுகாய், 20க்கும் மேற்பட்ட மசாலா பொடி வகைகள், பீட்ரூட் ஜாம், பினாயில், சோப்பு தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.