செங்குடி மிக்கேல் அதிதுாதர் சர்ச் திருவிழா கொடியேற்றம்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம்அருகே செங்குடி மிக்கேல் அதிதுாதர் சர்ச் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆர்.எஸ்.மங்கலம்அருகே செங்குடி மிக்கேல் அதிதுாதர் சர்ச் விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5:55 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. செங்குடி பங்கு பாதிரியார் தினேஷ், பாதிரியார் டேவிட் ஆகியோர் கொடியேற்றம் திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து கொல்கத்தா சேவியர் பல்கலை துணை வேந்தர் பாதிரியார் பெலிக்ஸ் கொடி மரத்தில் விழாக் கொடியேற்றினார். பின் கொடி பாடல் இசைக்கப்பட்டு கொடி வழிபாடு செய்யப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் மாலையில் நற்கருணை வழிபாடும், நவநாள் திருப்பலியும் நடக்கிறது.விழாவின் தொடர்ச்சியாக செப்.28ல் திருவிழா திருப்பலி நடைபெற்று இரவில் முக்கிய விழாவான தேர்பவனி விழா நடக்கிறது. மறுநாள் செப்.29ல் மாலை தேர்பவனி ஊர்வலம் நடைபெற்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் தினேஷ், கிராமத் தலைவர் அருள் சூசை, செயலாளர் துரைராஜ், பொருளாளர் மிக்கேல் ராஜ் ஆகியோர் தலைமையில் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.