மேலும் செய்திகள்
கருகிய மிளகாய் செடிகளை கால்நடைகளை விட்டு அழிப்பு
27-Apr-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான செங்குடி, சீனாங்குடி, எட்டிய திடல், முத்துப்பட்டினம், இருதயபுரம், மங்கலம், அத்தானுார், அண்ணாமலை நகர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் கோடை சாகுபடியாக எள், பருத்தி, பயறு வகைகள் உள்ளிட்ட சிறு தானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பெரும்பாலான கோடை விவசாயப் பயிர்கள் கடும் வறட்சியை தாக்கு பிடிக்க முடியாமல் கருகி வருகின்றன. குறிப்பாக பிப்., கடைசி வாரத்தில் விதைப்பு செய்யப்பட்ட எள் விவசாயம் தற்போது பூத்து மகசூல் கொடுக்கும் நிலையில் வயல்களில் போதிய ஈரப்பதம் இன்றி கருகி வருகின்றன. கடந்த சில மாதங்களாக ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் கடும் வறட்சியால் கோடை சாகுபடி விவசாய பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.
27-Apr-2025