உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துாரில் துார்ந்து போன கழிவுநீர் கால்வாய்

முதுகுளத்துாரில் துார்ந்து போன கழிவுநீர் கால்வாய்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட கடலாடி ரோட்டில் கால்வாய் துார்ந்து போனதால் கழிவுநீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது.முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட மறவர் தெரு, காவல்காரன் சந்து, கடலாடி ரோடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்வதற்காக ரோட்டோரத்தில் கால்வாய் அமைக்கப்பட்டு கழிவுநீர் செல்கிறது.குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு ரோடுகள் மட்டும் பராமரிப்பு பணி செய்யப்பட்டு உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கால்வாய் துார்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் முறையாக செல்லாமல் தேங்குகிறது.ரோட்டோரத்தில் பள்ளமாக இருப்பதால் நடந்து செல்லும் மக்கள் அச்சப்படுகின்றனர். தேங்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே புதிதாக கழிவுநீர் கால்வாயை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ