உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடியில் சப்வேயில் கழிவு நீர்: தீர்வு எப்போது

 பரமக்குடியில் சப்வேயில் கழிவு நீர்: தீர்வு எப்போது

பரமக்குடி: பரமக்குடியில் நேற்று 5 மணி நேரம் வரை கொட்டி தீர்த்த மழையால், ரோடு, சப்வே உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது.சப்வேயில் கழிவு நீருக்கு தீர்வு எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. பரமக்குடியில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மழை பெய்யத் துவங்கியது. இதனால் மார்கழி மாதம் கோயிலுக்கு செல்வோர் சிரமப்பட்டனர். காலை 9:00 மணி வரை மழை பெய்தது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடக்கும் நிலையில் மாணவர்கள் மழையிலும் பள்ளிக்கு செல்ல நேர்ந்தது. ஒவ்வொரு முறை பரமக்குடியில் மழை பெய்யும் போதும் முதுகுளத்துார் ரோடு சப்வேயில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. மேலும் நாள் முழுவதும் அருகில் உள்ள வாறுகால்களில் இருந்து கழிவு நீர் கசிந்து தேங்கு கிறது. நகராட்சி வார்டுகளுக்கு உட்பட்ட மக்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் மக்கள் இதை கடந்து செல்லும் நிலை உள்ளது. டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் சப்வேயை பயன்படுத்த முடியாத நிலை உள்ள துடன், கழிவுநீருக்கு மத்தியில் செல்வதால் தொற்று நோய் அபாயம் மற்றும் விபத்து அச்சம் அதிகரித்துள்ளது. ஆகவே நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் ரோடுகளில் தேங்கும் மழை நீர் மற்றும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ