வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கமல்ஹாசன் MP அவர்கள், அவரது ஊரான பரமக்குடிக்கு ஏதாவது செய்ய நினைத்தால், இதை செய்யலாமே? குளத்தை சுத்தம் செய்வித்து, சுற்றி வசிக்கும் மக்களின் நீர் ஆதாரத்தை காக்கும் பணியை செய்யலாமே? செய்வாரா?
பரமக்குடி, : பரமக்குடி எமனேஸ்வரம் மாமாங்க தெப்பக்குளம் கழிவு நீரால் மூழ்கியுள்ள சூழலில் எப்போது சீரமைக்கப்படும் என பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில் எதிரில் மாமாங்க தெப்பக்குளம் உள்ளது. இது எம தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. கும்பகோணம் மகாமகம் குளத்திற்கு அடுத்தபடியாக எமனேஸ்வரத்தில் மாமாங்க தெப்பக்குளம் என்ற பெயரால் உருவாகியுள்ளது. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா மகத்திற்காக துார் வாரும் பணிகள் நடந்தது. ஆனால் பணிகள் நகராட்சியால் பாதியில் கைவிடப்பட்ட நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 லட்சத்தில் எம்.எல்.ஏ., நிதியில் கலெக்டர் ஒத்துழைப்புடன் தூர்வாரி படித்துறைகள் கட்டப்பட்டன. ஆனால் குளம் பராமரிக்கப்படாமல் உள்ளதுடன், குளக்கரையிலேயே நகராட்சி சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு கழிவுகள் விடும் சூழல் உள்ளது. குளத்தில் துர்நாற்றம் வீசுவதுடன், அருகில் உள்ள வீடுகளில் நீரூற்றுகள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி மற்றும் எம்.எல்.ஏ., சார்பில் குளம் சீரமைக்கப்படும் என தெரிவித்தனர். ஆகவே பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தை பறைசாற்றும் எம தீர்த்த மாமாங்க தெப்பக்குளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்தினர்.
கமல்ஹாசன் MP அவர்கள், அவரது ஊரான பரமக்குடிக்கு ஏதாவது செய்ய நினைத்தால், இதை செய்யலாமே? குளத்தை சுத்தம் செய்வித்து, சுற்றி வசிக்கும் மக்களின் நீர் ஆதாரத்தை காக்கும் பணியை செய்யலாமே? செய்வாரா?