மேலும் செய்திகள்
குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு பிடிபட்டது
14-Sep-2024
சிறுத்தை நடமாட்டம் அதிகாரி விளக்கம்
24-Sep-2024
கீழக்கரை: கீழக்கரை வனச்சரக அலுவலகம் வழியாக சென்ற பெண்ணிடம் வனச்சரக அலுவலர் கைகாட்டி பேசியதாக பெண்ணின் உறவினர்கள் செப்.9ல் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கீழக்கரையில் மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகம் கடற்கரை அருகே அமைந்துள்ளது. இங்கு வனச்சரகராக செந்தில்குமார் 48, பணியாற்றுகிறார். செப்.9 காலை 6:00 மணிக்கு வாக்கிங் செல்ல தயாரான போது அப்பகுதியைச் சேர்ந்த 46 வயது அவ்வழியாக வேலைக்கு சென்றார். செந்தில்குமார் பெண்ணிடம் சைகையில் பேசி உள்ளார்.இதையறிந்த பெண்ணின் உறவினர்கள் கீழக்கரை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழக்கரை போலீசில் புகார் அளித்தனர். சைகையில் வனச்சரகர் பேசியதாக புகாரில் கூறி இருந்தார். இந்நிலையில் நேற்று புகாரை வாபஸ் பெற்றார்.அதில், அவர் ஏதோ சைகையில் என்னம்மா என்று கேட்டதை நான் தவறாக புரிந்து கொண்டு புகார் அளித்து விட்தால் வாபஸ் பெறுகிறேன் என கூறியுள்ளார்.வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், கீழக்கரை மன்னார் வளைகுடா பகுதியில் கஞ்சா, போதை பொருள்கள் கடத்துவதற்கு நான் தடையாக உள்ளேன். எனது செயல்பாட்டை முடக்க சிலர் கூட்டு சதி செய்து இடமாற்ற முயற்சிக்கின்றனர். என் மீது எந்த தவறும் இல்லை என்றார்.
14-Sep-2024
24-Sep-2024