மேலும் செய்திகள்
மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
19-Apr-2025
சிக்கல்: சிக்கல் நகர் பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள தொல்லை தரும் வெறிநாய்களை அப்புறப்படுத்தவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி செய்யவும், சிக்கல் ஊராட்சி பகுதிகளில் கழிவுநீர் வாறுகால் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடக்கிறது.சிக்கல் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் மக்களின்அடிப்படை பிரச்னைகளை சரி செய்யக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. எஸ்.போஸ் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் அம்ஜத்கான் முன்னிலை வகித்தார். தாலுகா குழு உறுப்பினர் பச்சம்மால், நகர் செயலாளர் பாலசுப்பிரமணியன், முகமது சுல்தான், ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் தொட்டி அமைத்து ஓராண்டுக்கு மேலாகியும் காவிரி குடிநீர் இணைப்பு வழங்காமல் பயன்படாத நிலையை கண்டித்து குடிநீர் தொட்டிக்கு மாலை போடும் போராட்டம் நடக்கும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
19-Apr-2025