உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிலம்ப பயிற்சியாளர்கள் உடல் உறுப்பு தானம்

சிலம்ப பயிற்சியாளர்கள் உடல் உறுப்பு தானம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களின் ஆராய்ச்சி படிப்பிற்கு பயன்படும் வகையில் மெழுகுவர்த்தி நண்பர்கள் பவுண்டேசன் சார்பில் சிலம்ப பயிற்சியாளர்கள் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். பாரதி சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளி நிறுவனத் தலைவர் சண்முகவேல், தலைமை பயிற்சியாளர் உமாபாரதி, அய்யனார் சிலம்பம் பயிற்சி பள்ளி பயிற்சியாளர் லாவண்யா, அங்கன்வாடி உதவியாளர் கல்யாணி ஆகியோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். உடற்கூறுயியல் துறைத் தலைவர் கற்பக ஜோதியிடம் உடல் தானம் செய்வதற்கான விருப்பப் படிவத்தை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ