மேலும் செய்திகள்
போலீஸ்காரர் விபத்தில் காயம்
18-Jul-2025
ராமநாதபுரம் : ராமநாதபுரம் உழவர் மையத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தில் சிறுதானிய பயிர் சாகுபடி முறைகள் குறித்து மகளிர் உழவர் ஆர்வலர் குழுவிற்குபயிற்சி அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) ராஜேந்திரன் தலைமை வகித்து பட்டறிவு பயணம், செயல் விளக்கங்கள் குறித்தும், சிறுதானிய முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் கூறினார். ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குனர் அம்பேத்குமார் திட்டங்கள், மானிய விபரங்களை உழவன் செயலியில்பதிவு செய்தல்குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் வேளாண் அலுவலர் ரவிசந்திரன், பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஆலோசகர் ஸ்ரீதர், வேளாண்மை விற்பனை,வணிகத் துறை அலுவலர் சபிதாபேகம், விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜேஸ்குமார், அபிநாஸ்ரீ ஆகியோர் செய்தனர். தொழில்நுட்ப மேலாளர் கோசலாதேவி நன்றி கூறினார்.
18-Jul-2025