கடைக்குள் புகுந்த பாம்பு
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகரில் ஏப். 26 இரவு 9:00 மணிக்கு பலசரக்கடையில் சாரைப் பாம்பு புகுந்தது.மளிகை கடையில் பொருள் எடுக்கும் பொழுது சாக்குக்கு அடியில் சுருண்டு படுத்திருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் சாயல்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனடிப்படையில் சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகம் தலைமையிலான வீரர்கள் பாம்பை மீட்டு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.வனச்சரங்கத்தினர் மூலம் சாயல்குடி காப்பு காட்டு பகுதியில் பாதுகாப்பாக பாம்பு விடப்பட்டது.