உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மேம்பாலத்தில் மண் அரிப்பு

மேம்பாலத்தில் மண் அரிப்பு

திருவாடானை; திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் மேம்பாலத்தின் சாய்வு தளத்தில் மண் அரிப்பு ஏற்படுவதால் உறுதித்தன்மை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் மேம்பாலம் உள்ளது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த பாலத்தின் மேற்கு பகுதியில் சாய்வு தளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு தடுப்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:இந்த மேம்பாலத்தில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு அதிக எடை கொண்ட கனரக வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன. அதன் அதிர்வு காரணமாகவும், அதிக மழை காரணமாகவும் பாலத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு தற்போது மேல்பகுதியில்இருந்து மண் சரிந்து விழுகிறது.மண் அரிப்பு காரணமாக பாலத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்படலாம். எனவே மேம்பாலத்தின் கீழ் சாய்வு தளத்தில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை