சோலார் மின் திட்டம் விழிப்புணர்வு முகாம்
சாயல்குடி: மின் நுகர்வோர்களிடம் அதிக மின்கட்டணத்தை குறைக்கும் வகையில் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கான சிறப்பு சோலார் விழிப்புணர்வு முகாம் சாயல்குடியில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கணேசன் தலைமை வகித்தார். சாயல்குடி பேரூராட்சி சேர்மன் மாரியப்பன் முன்னிலை வகித்தார். வர்த்தக நலச்சங்க தலைவர் அபுபக்கர், பெரு வணிகர் சங்க துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன் உட்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒரு கிலோ வாட் சூரிய மின்தகடு பொருத்துவதன் மூலம் மாதம் 150 யூனிட் இலவச மின்சாரம் பெற முடியும். இரு மாதங்களுக்கு 500 முதல் 800 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கிடைக்கும் சேமிப்பு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. சாயல்குடி துணை மின் நிலைய உதவி பொறியாளர் கனகராஜ் தலைமையிலான மின்வாரிய அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.