உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எஸ்.பி., அலுவலகம் முற்றுகை

எஸ்.பி., அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தை திராவிட தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் அருகே இளமனுார் பகுதியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிட தமிழர் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக கோஷங்களை எழுப்பியபடி வந்தவர்கள் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் எஸ்.பி., அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சந்தீஷ் எஸ்.பி., யிடம் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை