உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்

கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் திட்டத்தில் தலா ஒரு ஒன்றியத்திற்கு 12 வீதம் 132 சிறப்பு முகாம்கள் நடக்கிறது.இதன்படி திருப்புல்லாணி ஒன்றியத்தில் உத்தரவை கிராமத்தில் ஜூன் 20, ராமநாதபுரம் காவனுார் கிராமத்தில் ஜூன் 24, ஆர்.எஸ்.மங்கலம் பகவதிமங்களம் கிராமத்தில் ஜூன் 20, மற்றும் திருவாடானையில் மணிகண்டி கிராமத்தில் ஜூன் 14ல் மண்டபம் பூமாலைவலசை கிராமத்தில் ஜூன் 28, கமுதி ஏ.நெடுங்குளம் கிராமத்தில் ஜூன் 11ல் நடக்கிறது. பரமக்குடி சுப்புராயபுரம் கிராமத்தில் ஜூன் 19, நயினார்கோவில் சதுர்வேதமங்களம் கிராமத்தில் ஜூன் 25ல், கடலாடி செவல்பட்டி கிராமத்தில் ஜூன் 27, முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றியம் புளியங்குடி கிராமத்தில் ஜூன் 19, போகலுார் முதலுார் கிராமத்தில் ஜூன் 18, செவ்வூரில் ஜூன் 25ல் முகாம்கள் நடக்கிறது.கால்நடைகளுக்கு தேவையான தாது உப்புக்கலவை இலவசமாக மற்றும் தீவன விதைகள் 100 சதவீதம் மானியத்திலும் வழங்கப்படும். சிறந்த முறையில் கலப்பின கிடாரி கன்றுகளை வளர்ப்பவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் கால்நடைகளை சிறப்பு முகாம்களுக்கு அழைத்து வந்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ