உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை பதிவு செய்ய ஊராட்சிகளில் சிறப்பு முகாம்

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை பதிவு செய்ய ஊராட்சிகளில் சிறப்பு முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் கிராம வாரியாக மே 3 முதல் ஜூலை 16 வரை ஊராட்சி அலுவலகங்களில் நடக்கிறது.இதன்படி மே 27 ல் கீழக்கரை தாலுகாவில் உள்ள பெரியபட்டினம், மே 28 ல் திருப்புல்லாணி, மே 29ல் வண்ணாங்குண்டு, மே 30ல் ரெகுநாதபுரம், மே 31ல் மாயாகுளம் ஆகிய கிராமங்களில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.எனவே மேற்கண்ட கிராமங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமிற்கு பதிவு செய்ய வருவோர் ரேஷன் கார்டு நகல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும்.கூடுதல் விபரங்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலரை 73730 04588 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ