உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

ராமநாதபுரம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதன்படி முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயரில் (ஆக.,21) இன்றும், ஈ.வெ.ரா., - நாளை (ஆக.22ல்), மகாத்மா காந்தி-ஆக.,28ல், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு- ஆக.,29ல் ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டி நடக்கிறது. மாவட்ட அளவிலான போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2ம் இடம் ரூ.3000, 3ம் இடம் ரூ.2000 வழங்கப்படும். அரசு பள்ளியில் பயிலும் இரு மாணவர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2000 வழங்கப்படும். பள்ளிக்கு தலா ஒருவரும், கல்லுாரிக்கு தலா இருவரும் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டி நடைபெறும் இடம், நேரம், தலைப்பு, விதிமுறைகள் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்லுாரிகளுக்கு கல்லுாரி கல்வி இணை இயக்குநர் வழியாக தகவல் தெரிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ, 04567 -- 232 130 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை