தாயகம் செல்ல பாஸ்போர்ட்; இலங்கை அகதிகள் கோரிக்கை
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் தங்கியுள்ளஇலங்கை அகதிகள், தங்களது நாட்டிற்கு செல்வதற்கு 'பாஸ்போர்ட்' வழங்க வேண்டும் எனவலியுறுத்தியுள்ளனர்.கலெக்டர் அலுவலகத்தில் மண்டபம் முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகள்ரஜாந்தி,அம்பிகா, கிஹாளினி, கலைச்செல்வி, அக்கினேஸ்வரி,செல்வராஜ், ராஜனி, தர்ஷிக்கா உள்ளிட்டோர் மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: பொருளாதர நெருக்கடி காரணமாகஇலங்கையில் இருந்து 2021, 2023ம் ஆண்டுகளில் படகு வழியாக இந்தியாவிற்குவந்தோம். மறுபடியும் சொந்த நாட்டிற்கு செல்லவிரும்புகிறோம். 'பாஸ்போர்ட்' வழங்கக் கோரி 13 குடும்பத்தினர் இந்திய துாதரகத்தில் பதிவு செய்து 3மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. எங்களுக்கு மத்திய அரசு 'பாஸ்போர்ட்' வழங்க வேண்டும் என்றனர்.