செப்.2 முதல் 7 ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் செப்.,2 முதல் 7 ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடக்கிறது. திருவாடானை தாலுகாவில் ஏற்கனவே ஜூலை, ஆக., ல் தொண்டி பேரூராட்சி உட்பட 40 ஊராட்சிகளில் முகாம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் செப்.,2 முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவங்குகிறது. செப்.,2ல் தேளூர், மாவூர், தளிர்மருங்கூர் ஆகிய ஊராட்சிகளுக்கு தேளூர் அரசு தொடக்கபள்ளியிலும், 3ல் கட்டவிளாகம், கூகுடி, பாகனுார் ஆகிய ஊராட்சிகளுக்கு நீர்க்குன்றம் சேவை மையத்திலும், 6ல் கருமொழி, நெய்வயல், டி.நாகனி ஆகிய ஊராட்சிகளுக்கு நெய்வயல் எஸ்.எச்.ஜி., கட்டடத்திலும் நடக்கிறது. செப்.,12ல் அரும்பூர், ஆதியூர், குளத்துார், அச்சங்குடி ஆகிய ஊராட்சி களுக்கு கடம்பாகுடி சேவை மையத்திலும், 16ல் கலியநகரி, புல்லகடம்பன், எஸ்.பி.பட்டினம் ஆகிய ஊராட்சிகளுக்கு கலியநகரி சேவை மையத்திலும், 18ல் நகரிகாத்தான், பதனக்குடி, சிறுகம்யூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நகரிகாத்தான் ஊராட்சி அலுவலகத்திலும், 23 ல் ஆண்டாவூரணி, அரசத்துார், மங்களக்குடி ஆகிய ஊராட்சிகளுக்கு அரசத்துார் சேவை மையத்திலும் நடக்கிறது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என திருவாடானை தாசில்தார் ஆண்டி தெரிவித்துள்ளார்.