மாநில கால்பந்தாட்ட போட்டி; பெரியபட்டினம் அணி வெற்றி
பெரியபட்டினம்: பெரியப்பட்டினம் கால்பந்தாட்டக் குழு சார்பில் செப்.27, 28, 29ல் மாநில அளவிலான ஏழு பேர் கால்பந்தாட்ட போட்டி பெரியபட்டினம் மினி விளையாட்டரங்கில் நடந்தது.பெரியபட்டினத்தில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரரான சுகைலின் நினைவாக நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்தும் 40 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு நாளும் மாலை 4:00 மணி முதல் இரவு வரை மின்னொளியில் கால்பந்தாட்ட போட்டி நடந்தது.இறுதிப் போட்டியில் பெரியபட்டினம் ஏ- அணியினரும், குப்பன்வலசை ஜூனியர் அணியினரும் மோதினர். அதில் 2:1 என்ற கோல் கணக்கில் பெரியபட்டினம் ஏ- அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசுசை பெற்றனர். இரண்டாவதாக குப்பன் வலசை ஜூனியர் அணியினர், மூன்றாவதாக தி மாஸ்டர் கிளப் அணியினரும், நான்காவதாக சித்தர்கோட்டை அணியினரும் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை, சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கப்பட்டது. எஸ்.டி.பி.ஐ., மாவட்ட தலைவர் ரியாஸ் கான், ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான் உட்பட ஜமாத் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.