உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இறந்தவர் பெயரில் உதவித்தொகை பெறுவதை தடுக்க நடவடிக்கை

இறந்தவர் பெயரில் உதவித்தொகை பெறுவதை தடுக்க நடவடிக்கை

திருவாடானை : அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் முதியோர் உதவித் தொகை திட்டத்தில் இறந்தவர்கள் பெயரில் பணம் பெறுவதை தடுக்கும் வகையில், வருவாய்துறையினர் இறந்த நபர்களின் விபரத்தை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.திருவாடானை தாலுகாவில் 4649 பேருக்கு தற்போது அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது.அரசுடைமை வங்கிகள், அஞ்சல் மூலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.சில மாதங்களாக இறந்தவர்கள் பெயரில் பணம் பெறுவதாக புகார் வந்ததால் அதை தடுக்கும் வகையில் கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியுள்ளது.இது குறித்து திருவாடானை சமூக நலத்திட்ட தாசில்தார் இந்திரஜித் கூறியதாவது: திருவாடானை தாலுகா முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் முதியோர் உதவித்தொகை பெறும் நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.இதில் இறந்தவர் 67 பேர் உட்பட அரசு பணியில் உள்ளவர், வயது குறைவானோர், வசதியானவர்கள் உதவித்தொகை வாங்கி வருவது கண்டறியப்பட்டு 200 பேர் ரத்து செய்யப்பட்டது.ஒவ்வொரு மாதமும், உதவித்தொகை பெறுபவர்களின் இறப்பு விவரத்தை சேகரித்து தருமாறு, வி.ஏ.ஓ.க்களுக்கு உத்தரவிடபட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ