திருநகரில் எரியாத தெரு விளக்கு
பரமக்குடி: பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் திருநகரில் நான்கு மாதங்களாக தெருவிளக்குகள் எரியாததால் மக்கள் இருளில் தவிக்கின்றனர்.தெளிச்சாத்தநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருநகர் உள்ளது. இங்கு 2-வது தெருவில் தெருவிளக்குகள் வரிசையாக ஒவ்வொரு மின்கம்பத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நான்கு மாதங்களாக இந்த விளக்குகள் எரியாத நிலையில் இருள் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.எனவே மின் விளக்குகளை பழுது நீக்கி இரவு நேர பயணத்தை எளிதாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.