பள்ளி விளையாட்டு மைதானத்தில் நாய்களால் மாணவர்கள் அச்சம்
தொண்டி: தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு கால்பந்து, வாலிபால், கைப்பந்து, ஓட்டம் என விளையாட்டுகளுக்காக தினமும் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இது தவிர தினமும் காலை,மாலையில் ஏராளமானோர் நடைபயிற்சி செய்கின்றனர். இவ்வளவு பேர் பயிற்சி பெறும் இந்த மைதானத்தில் ஏராளமான நாய்கள் கூட்டமாக திரிகின்றன. தொண்டி பகுதியில் மக்கள் கூடும் இடங்களில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில் விளையாட்டு மைதானத்திலும் நாய்கள் திரிவதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.