அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
திருவாடானை: திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று கல்லுாரி முதல்வர் பழனியப்பன் கூறினார். அவர் கூறியதாவது:திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் 2025-26ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.மாணவர்கள் இலவசமாக விண்ணப்பிக்க இணையதள வசதி உதவி மையம் கல்லுாரி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ரூ.50 அரசு கட்டணமாகவும், ஆதி திராவிடர் மாணவர்கள் ரூ.2 அரசு கட்டணமாகவும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மாணவர்கள் சாதி சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.எஸ்சி., காட்சி தொடர்பியல், பி.காம் தமிழ் வழி, பி.காம் ஆங்கில வழி பட்டபடிப்புகளுக்கு மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என்றார்.