சிலம்ப போட்டியில் மாணவர்கள் வெற்றி
ராமநாதபுரம்: ஒசூரில் நடந்த தெற்கு ஆசிய சிலம்ப போட்டியில் ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றனர்.ஓசூரில் வேல்ட் யூனியன் சிலம்பம் பெடரேஷன் சார்பில் தெற்கு ஆசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தது.தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். ஒற்றைக் கம்பு, இரட்டை கம்பு, கம்பு சண்டை, வேல் கம்பு, வாள் வீச்சு போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.இப்போட்டியில் ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவி கனிஷ்கா ஒற்றை கம்பு, இரட்டை கம்பு பிரிவில் முதல் பரிசு பெற்று தங்கப்பதக்கமும், மாணவர் லித்திஹாசன் ஒற்றை கம்பு பிரிவில் தங்கப்பதக்கம் வென்றனர்.இருவரும் இலங்கையில் நடைபெறும் ஆசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சாதனை மாணவர்களை பள்ளி முதல்வர் தாமஸ், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.