உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அப்பனேந்தலில் மயானம் அமைக்க ஆய்வு

அப்பனேந்தலில் மயானம் அமைக்க ஆய்வு

முதுகுளத்துார்: -தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல் கிராமத்தில் மயானம் அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.முதுகுளத்துார் அருகே சாத்தனுார் ஊராட்சிக்கு உட்பட்ட அப்பனேந்தல் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் இறந்தவர்கள் உடலை புதைப்பதற்கு மயானம் இல்லாமல் கேளல்- - அப்பனேந்தல் செல்லும் ரோட்டோரத்தில் புதைக்கின்றனர்.போதுமான இடவசதி இல்லாததால் மேலும் ஏற்கனவே புதைத்தவர்களின் உடல் மேலே புதைக்கும் நிலை உள்ளது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கிராமமக்கள் மனு கொடுத்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக கிராமத்தில் பொது மயானம் அமைக்க இடங்கள் தேர்வு செய்வது குறித்து ஆர்.ஐ., சோனைமுத்து தலைமையிலான அதிகாரிகள் அப்பனேந்தல் கிராமத்தில் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ