மேலும் செய்திகள்
மதுரை--ராமேஸ்வரம் இடையே மெமு ரயில்கள் இயக்கப்படுமா
1 hour(s) ago
பா.ஜ., கட்சியின் 2வது பூத் கமிட்டி ஆலோசனை
2 hour(s) ago
அக்.11ல் ரேஷன் குறை தீர் முகாம்
2 hour(s) ago
நாளை (அக்.9) மின்தடை
2 hour(s) ago
ராமநாதபுர மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பழங்கள், காய்கறிகள் சாகுபடி விரிவாக்கம் அரசு மானியம்வழங்கப்படுகிறது.வீரிய ரக காய்கறிகள், முருங்கை, மா, கொய்யா, பப்பாளி, மிளகாய் 2.5 ஏக்கருக்கு40 சதவீதம் மானியம்வழங்கப்படுகிறது.இதுபோக காய்கறி சாகுபடி, நிலப்போர்வைஊக்கப்படுத்துதல், பணிமனை இயந்திர மயமாக்கல், விவசாயிகளுக்கு பயிற்சி, தேனீ பெட்டி வைத்தல், நடமாடும்காய்கறி வண்டிகள் வழங்குதல் ஆகிய திட்டத்திற்கு நிதிஒதுக்கப்படுகிறது.அதே சமயம் சீமை இலந்தை,கொடுக்காபுளிக்கு மானியம் வழங்குவது இல்லை.இந்நிலையில் நடப்பு 2024-25ம் ஆண்டில் முதல் முறையாகசீமைக்கருவேல மரங்களுக்கு பதில் சீமை இலந்தை, கொடுக்காபுளி மரங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளைஊக்கப்படுத்த அரசு மானியம் வழங்குகிறது.ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை துணைஇயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது:ஒரு விவசாயிக்கு 2.5 ஏக்கரில் மா அடர்முறைநடவிற்கு ரூ.9840, கொய்யா அடர்முறை நடவிற்கு ரூ.17,600 வழங்கப்படுகிறது. இந்த வரிசையில் இந்த ஆண்டு முதல்சீமை இலந்தை, கொடுக்கபுளி சாகுபடிக்கு முதற்கட்டமாக 2.5 ஏக்கருக்கு ரூ.14ஆயிரத்து 400 மானியம் வழங்கப்படுகிறது.சிறு,குறு விவசாயிகள் 2 பேர்இணைந்து கூட சீமைக்கருவேல மரங்களுக்கு பதில் கொடுக்காபுளி, சீமைஇலந்தை நடவு செய்துமானியம் பெறலாம். மேலும்விபரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்,உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் தொடர்புகொள்ளலாம் என்றார்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago