உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை கோயிலில் சுமங்கலி பூஜை

திருவாடானை கோயிலில் சுமங்கலி பூஜை

திருவாடானை: திருவாடானை சிநேகவல்லி அம்மன் சன்னதியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சுமங்கலி பூஜை நடந்தது.தெய்வங்களின் அருளை பெற சுமங்கலிகளை அம்பாளாக வழிபட்டு புடவை, குங்குமம் போன்ற மங்கல பொருட்களை கொடுப்பது வழக்கமாகும். நவாரத்திரி எட்டாம் நாள் விழாவை முன்னிட்டு சிநேகவல்லி அம்மன் சன்னதியில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகபூஜை நடந்தது. அதனை தொடர்ந்து பெண்கள் வரிசையாக அமர்ந்து பூஜை நடந்தது. முன்னதாக சிநேகவல்லி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ