உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

பெரியபட்டினம்: பெரியபட்டினம் கால்பந்து குழு சார்பில் ஒரு மாதம் நடந்த கால்பந்து பயிற்சி முகாமில் நிறைவு விழா நடந்தது. இதில் 334 பேர் கலந்து கொண்டனர்.கால்பந்து, யோகா, தடகளம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. சீனியர், ஜூனியர், சப் ஜூனியர் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நான்கு அணிகள் தேர்வு செய்து அவர்களுக்கு இடையில் கால்பந்து லீக் போட்டிகள் நடந்தது.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது. பெரியபட்டினம் கால்பந்து அணி ஆலோசகர் சேகு ஜலாலுதீன் தலைமை வகித்தார்இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் அப்பாஸ் அலி, திருப்புல்லாணி எஸ்.ஐ., சிவசாமி, பழனிவலசை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், எஸ்.டி.பி.ஐ., மாவட்ட தலைவர் ரியாஸ் கான், பெரியபட்டினம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் அன்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியை ரிப்னாஸ் தொகுத்து வழங்கினார். பி.எப்.சி., அணியின் ஒருங்கிணைப்பாளர் முகம்மது ஜெசாம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை