இருக்கை இல்லை
*இருக்கை இல்லை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் உள்ள இருக்கைகள் சேதமடைந்துள்ளன. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கீழே அமர்ந்துள்ளனர். சேதமடைந்த இருக்கைகளை சரிசெய்ய வேண்டும். -ச.விஜயலெட்சுமி, ஏர்வாடி. *பிளாஸ்டிக் குப்பைகள்ராமநாதபுரம் முகவை ஊருணியில் தற்போது தண்ணீர் வற்றிய நிலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அனைத்தும் கரை ஒதுங்கியுள்ளன. மீண்டும் துாய்மையான தண்ணீர் வருவதற்கு ஏதுவாக ஊருணியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். _கி. ரவீந்திரன், ராமநாதபுரம். *துர்நாற்றம் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளே உள்ள கடைகளின் அசுத்தமான நீரை பஸ் நிற்கும் பகுதியில் ஊற்றுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கரை படிந்த துர்நாற்றம் ஏற்படுகிறது. பஸ் ஏற காத்திருக்கும் பயணிகளுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது. பஸ் ஸ்டாண்டை துாய்மையாக பராமரிக்க வேண்டும். -ப. சொக்கலிங்கம், ஆர்.எஸ்.மங்கலம். --