உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டி-20 கிரிக்கெட் போட்டி துவக்கம்

டி-20 கிரிக்கெட் போட்டி துவக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள், போலீசார் நல்லுறவை பேணும் வகையில் டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் போட்டியை துவக்கி வைத்தார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்து அவரும் வீரர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். எஸ்.பி., கூறியதாவது: ஏப்., மே கோடை விடுமுறையில் இளைஞர்களிடையே விளையாட்டு உணர்வை வலுப்படுத்தவும், போலீசார் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக டி-20 கிரிக்கெட் போட்டி 10 நாட்கள் நடக்கிறது. 36 அணிகளில் ராமநாதபுரம் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களை சேர்ந்த 600 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !