மேலும் செய்திகள்
பிரதோஷ வழிபாடு
11-Apr-2025
ரெகுநாதபுரம்: --தமிழ் புத்தாண்டு சித்திரை முதல்நாளில் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் விசு கனி தரிசனம் நடந்தது. மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், காய்கறிகள் 108 தட்டுகளில் வரிசையாக வைக்கப்பட்டது. ஐயப்பன் உருவப்படத்திற்கு முன்பாக கண்ணாடி வைத்து அதன் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் கோயில் தலைமை குருசாமி மோகன், வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்தனர்.* ராமநாதபுரம்: ராமநாதபுரம் சந்தைகடை வல்லபை விநாயகர் கோயில் காய்கறி, பழங்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதுபோல் குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயில், ரயில்வே பீடர் ரோடு வெட்டுடையாள் காளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.* பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழாவின் நிறைவு நாளில் அம்மன் சயன திருக்கோலத்தில் வீதி உலா வந்தார். நேற்று சித்திரை தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு அம்மன் சயன திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் சிறப்பு மேளதாளங்கள் முழக்க வீதி உலா வந்தார். நேற்று காலை தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர். திருவாடானை தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர், பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள விநாயகர் கோயில், மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயில்களில் நேற்று சித்திரை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* ஆர்.எஸ்.மங்கலம்: கைலாசநாதர் கோயில், அரசாள வந்த அம்மன் கோயில், திரவுபதி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோயிலில், 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. சாத்தனுார் மகா சாத்தையனார் கோயிலில், நேற்றுமுன்தினம் இரவில், பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் வாசிக்கப்பட்டது. முன்னதாக மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
11-Apr-2025