மேலும் செய்திகள்
தேனியில் ஆசிரியர் தின விழா
06-Sep-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளி பட்டணம் ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு ஆயிர வைசிய மகாஜனசபை தலைவர் ஜெயராமன் மலர்துாவி மரியாதை செலுத்தினார். பள்ளியின் தாளாளர் ஜெயக்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் மலர்துாவி மரியாதை செலுத்தினர். சிறந்த ஆளுமைக்கான விருது பெற்றுள்ள பள்ளியின் முதல்வர் மதுசூதனன் கவுரவப்படுத்தப்பட்டார். ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர். * பரமக்குடி அருகே சோமநாதபுரம் சவுராஷ்டிரா தேசிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. சவுராஷ்டிர தேசிய கல்வி கழக தலைவர் ராமய்யன் தலைமை வகித்தார். தாளாளர் குப்புசாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி வரவேற்றார். பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியர் பிரகாஷ் மாணவர்களிடம் பேசினார். ஆசிரியை கவுரி வாழ்த்தினார். ஆசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
06-Sep-2025