உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொலை முயற்சி வழக்கில்  வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

கொலை முயற்சி வழக்கில்  வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராமநாதபுரம் பழனிவலசை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் 40. மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவர், உறவினர் ரவியுடன் 2021 ஏப்.,1ல் மது வாங்க டூவீலரில் சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த ராஜாங்கம் மகன் ராஜேந்திரன் 38, மது வாங்குவதற்கு அங்கு வந்துள்ளார். பின் மூவரும் பூசாரி நகர் என்ற பகுதியில் மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜாங்கம் மகன் ராஜேந்திரன் மற்றொரு ராஜேந்திரனை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்தவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். தேவிப்பட்டினம் போலீசார் கொலை முயற்சி வழக்கில் ராஜேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி ஜெயசுதாகர் நேற்று தீர்ப்பளித்தார். ராஜேந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1500 அபராதமும் விதித்தார். ஏற்கனவே ஒரு மாதம் சிறையில் இருந்த காலத்தை தண்டனையில் கழிக்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை