மேலும் செய்திகள்
பாம்பளம்மன் கோயில் பொங்கல் விழா
30-Aug-2024
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வடக்கூர்சுந்தர விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா 20ம் ஆண்டு விஸ்வகர்மா ஜெயந்தி விழா, 17ம் ஆண்டு விஸ்வகர்மா உற்ஸவமூர்த்தி வருஷாபிஷேக விழா, 4ம் ஆண்டு முளைப்பாரி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. கணபதி ஹோமம் துவங்கி சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. சுந்தர விநாயகர், விஸ்வகர்மா உற்ஸவமூர்த்திக்கு பால், சந்தனம், மஞ்சள், பன்னீர்,திரவியப் பொடி உட்பட 21 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி துாக்கி விநாயகர் கோயில், அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட், அய்யனார் கோயில்,செல்வி அம்மன் கோயில் உட்பட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஊருணியில் கரைத்தனர். ஏற்பாடுகளை விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள்இளைஞர் சங்கம் நிர்வாகிகள் செய்தனர்.
30-Aug-2024