மேலும் செய்திகள்
எமனேஸ்வரம் சிவன் கோயில் பிரதோஷம்
24-Jun-2025
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் கடம்பூர்கிராமத்தில் வடமாடு பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நயினார்கோவில் ஒன்றியம் கடம்பூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வல்லபை விநாயகர், சண்முகநாதர், தர்ம முனீஸ்வரர், சீப்பருடைய அய்யனார், ஆதி திரிபுரசுந்தரி அருள்பாலிக்கின்றனர். இங்கு நேற்று காலை 7:00 மணிக்கு வருடாபிஷேக விழாவையொட்டி ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகள் நிறைவடைந்தது. மகா தீபாராதனைக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து காலை முதல் 3ம் ஆண்டு வடமாடு பிடிக்கும் விழா நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் துள்ளி வந்த காளையை அடக்கி பரிசுகளை வென்றனர். ஏற்பாடுகளை கடம்பூர் கிராம பொதுமக்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
24-Jun-2025