உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பழைய கலெக்டர் அலுவலகத்தில்  குப்பை கொட்டும் இடமான அறை அலுவலர்கள் அவதி

பழைய கலெக்டர் அலுவலகத்தில்  குப்பை கொட்டும் இடமான அறை அலுவலர்கள் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகம் சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளதால் முதல் தளத்தில் உள்ள காலி அறையை குப்பை கொட்டும் இடமானதால் துர்நாற்றத்தால் அலுவலர்கள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி கிளை, தணிக்கைதுறை உதவி இயக்குநர் அலுவலகம், மேல்தளத்தில் மகிளா நீதிமன்றம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன.இங்குள்ள கழிப்பறைகள் பராமரிப்பின்றி பெயரளவில் உள்ளன. குறிப்பாக முதல் தளத்தில் உள்ள கழிப்பறை சேதமடைந்துள்ளது, அதன் அருகேயுள்ள காலி அறையில் குப்பையை கொட்டி குவித்துஉள்ளனர். இதனால் துர்நாற்றமும், விஷபூச்சிகள் நடமாட்டமும் உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் மேல்தளத்தில் உள்ள கழிப்பறைகளை சீரமைத்தும், குப்பையை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ