மேலும் செய்திகள்
தென்னக ரயில்வே பொதுமேலாளர் சிங் ஆய்வு
18-Jun-2025
பரமக்குடி:பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வருவதால் பயணிகள் உற்சாகமடைந்துஉள்ளனர். மத்திய அரசின் அம்ரித்பாரத் திட்டம் நாடு முழுவதும் பல நுாறு ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இத்திட்டத்தில் காம்பவுண்ட் சுவர், கிரானைட் மற்றும்சிமென்ட் தளங்கள், லிப்ட் வசதி, கார் மற்றும் டூவீலர்கள் நிறுத்துமிடம், எல்.இ.டி., டிஸ்ப்ளே என பல கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. தொடர்ந்து மதுரை, ராமேஸ்வரம் மார்க்கத்தில்பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மட்டும் ஆண்டுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் மூலம் 10 கோடி ரூபாயை தாண்டி வருமானம் ஈட்டி தருகிறது. பரமக்குடி கைத்தறி பட்டு, குண்டு மிளகாய், பருத்தி என பெயர் பெற்று விளங்குகிறது. இதன்படி ரயில்வே ஸ்டேஷனை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்துகின்றனர். பிரம்மாண்டமான ஆர்ச் மற்றும் நுழைவு பகுதிகள் மின் ஒளியில் ஜொலிப்பதால் மக்கள் உற்சாகத்துடன் சென்று வருகின்றனர். இச்சூழலில் தொலைதுார ரயில்கள் அனைத்தும்பரமக்குடியில் நின்று செல்லும்படி தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
18-Jun-2025