உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இரவில் மினி பார் ஆன மார்க்கெட்

இரவில் மினி பார் ஆன மார்க்கெட்

ராமேஸ்வரம், ஜன.22-ராமேஸ்வரம் நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் இரவில் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. வளாகத்தில் காலி மது பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன.ராமேஸ்வரம் நகராட்சிக்கு சொந்தமான மீன், காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு சேதமடைந்த பழைய கடைகளை அகற்றி புதிய கட்டுமானப் பணி நடக்கிறது. இந்த புதிய கடை கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ள நிலையில் இங்கு இரவில் சிலர் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை அங்கேயே வீசி விடுகின்றனர். போதை ஆசாமிகள் கூச்சலிட்டு ரகளை செய்வதால் மார்க்கெட் அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. உடைந்து கிடக்கும் மது பாட்டில்களால் பொருள்கள் வாங்க செல்லும் மக்களின் கால்களை பதம் பார்க்கிறது. எனவே மார்க்கெட் வளாகத்தை சுத்தம் செய்து மார்க்கெட் முழுவதும் சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாத்திட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ