உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவாதமின்றி 10 நிமிடத்தில்  முடிந்த நகராட்சி கூட்டம்; அஜண்டா வரல.. கவுன்சிலர் புகார்

விவாதமின்றி 10 நிமிடத்தில்  முடிந்த நகராட்சி கூட்டம்; அஜண்டா வரல.. கவுன்சிலர் புகார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் கவுன்சில் கூட்டத்தில் தீர்மானங்கள் 1,2,3, என வாசிக்கப்பட்டு தீர்மானங்கள் மீது எந்த விவாதமும் இல்லாமல் 10 நிமிடங்களில் முடிக்கப்பட்டது. ராமநாதபுரம் நகராட்சி கூட்ட அரங்கத்தில் நேற்று மாதாந்திர சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். கமிஷனர் அஜிதா பர்வின் முன்னிலை வகித்தார். காலையில் 10:40 மணிக்கு துவங்கிய கூட்டத்தில் புதிய பஸ் ஸ்டாண்டில் கடைகள் திரும்ப ஒப்படைப்பு உள்ளிட்ட 60க்கு மேற்பட்ட தீர்மானங்கள் முழுமையாக வாசிக்கப்படாமல் பொருள் 1, 2, 3, 4, 5 என வரிசையாக நம்பர் மட்டும் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மக்கள் பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசாமல் எந்தவித விவாதமும் நடைபெறாமல் கூட்டம் 10 நிமிடங்களில் முடிக்கப்பட்டது. அஜண்டா வரவில்லை நகராட்சி பா.ஜ., கவுன்சிலர் குமார் கூறுகையில், கூட்டத்திற்குரிய அஜண்டா வழங்கி முறையாக அறிவிப்பு வழங்காததால் இந்த கூட்டத்தில் நான் பங்கேற்க வில்லை. கவுன்சிலர்களுக்கு போன் மூலம் தான் அழைப்பு விடுக்கின்றனர். பெயரளவில் நகராட்சி கூட்டம் நடத்தப்படுகிறது என்றார். நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் கூறுகையில், கவுன்சில் கூட்டத்திற்கான அஜண்டா அக்.,15 முதல் வழங்கப்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக சிலருக்கு கொடுக்க முடியவில்லை. பணம் கட்டாதவர்கள், கடை திரும்ப ஒப்படைப்பு, 2வது ஏலமிட்ட கடைகளுக்கு ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட தீர்மானம் வைக்கப்பட்டது. மற்றபடி கூட்டம் முறைப்படி நடந்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி